செப்டம்பர் மாத ஊதியத்தை வழங்கக் கோரி, செங்கல்பட்டில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், கணக்காளர்கள், அலுவலக பணியாளர்கள் என தமிழ்நாடு முழுவதும் 32ஆயிரத்து 500 பேர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் சம்பளம் இதுவரை வழங்கவில்லை. இந்நிலையில் சம்பளம் வழங்காததை கண்டித்தும், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு உடனே வழங்க வலியுறுத்தியும், அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மத்திய அரசு நிதியை எதிர்பார்க்காமல் தமிழக அரசே சம்பளம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.