செய்யூர் அருகே பட்டா மாறுதலுக்காக லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது நண்பன் இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது விசாரணை
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்திற்கு உட்பட்ட தண்டரை கிராமத்தைச் சேர்ந்தவர் புகழேந்தி, தனக்கு சொந்தமான நிலத்தில் பட்டா மாறுதலுக்காக கிராம நிர்வாக அலுவலர் சுதாகரை அனுகிய போது லஞ்சம் கேட்டுள்ளார்.
புகழேந்தி சென்னை ஆலந்தூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் கேட்பதாக புகார் கொடுத்துள்ளார்
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி
சென்னை ஆலந்தூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான பத்துக்கும் மேற்பட்ட போலீசார் கிராம நிர்வாக அலுவலர் சுதாகர் அவரது நண்பரான பழனி மூலம் லஞ்சம் பெறும் பொழுது பழனியை கைது செய்தனர். அதன் பின்னர் விசாரணையில் கிராம நிர்வாக அலுவலர் சுதாகர் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.