செங்கல்பட்டில் வெயிலுடன் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி

51பார்த்தது
செங்கல்பட்டில் சட்டென்று மாறிய வானிலை.!!!

வெயிலுடன் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி.

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்த நிலையில் தற்போது சில நாட்களாக மழை சற்று ஓய்ந்துள்ளது.

அதேபோல் அக்டோபர் 20ஆம் தேதி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில்
தற்பொழுது சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர், மல்ரோசாபுரம், திருக்கச்சூர், பேரமனூர், சாஸ்திரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது
இருள் சூழ்ந்து மேகம் காணப்பட்டது திடீரென வெயில் மற்றும் மழை என மாறி மாறி வானிலை மாறியது.

தற்பொழுது சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக வெயிலுடன் மழை பெய்து வருகிறது இதனால் இந்த பகுதி முழுவதுமே குளிர்ச்சியான சூழல் வீசுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.!!

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி