"பிரிவு என்பது புதிய அமைதியாக பிறக்கலாம்" - பார்த்திபன் பதிவு

53பார்த்தது
"பிரிவு என்பது புதிய அமைதியாக பிறக்கலாம்" - பார்த்திபன் பதிவு
இயக்குநரும், நடிகருமான பார்த்திபன், ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து குறித்து தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “பிரிவு என்பது துக்கம் மட்டுமல்ல, புதிய அமைதியாகவும் பிறக்கலாம். விலகி நின்று அவரவர் விருப்பம் போல வாழ இனி(ய) வழியுள்ளதா என சம்மந்தப் பட்டவர்கள் ஆராயலாம். ஊர் கூடி உறவை கொண்டாடி வழியனுப்புதல் போலே, ஊர் விலகி ‘பிரிவு’ என்ற முடிவையும் சமமாய் மதித்து அமைதிக்கு உதவிட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி