திரையரங்க வாயில்களில் நின்று திரைப்படம் எவ்வாறு உள்ளது என ரசிகர்களிடம் கருத்து கேட்பதற்கு தடை விதிக்க வேண்டும் என நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இயக்குநர் பாரதிராஜாவை தலைவராக கொண்டு செயல்படும் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திரைப்படம் எப்படி இருக்கிறது என்று கூறுவதாக நினைத்து தனிப்பட்ட வன்மத்தை கக்குகின்றனர். 'கங்குவா' திரைப்பட விமர்சனம் என்ற பெயரில் பெரியவர் ஒருவர் வன்மத்தை கக்கினார். இனி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.