ரிஷிவந்தியம் - Rishivandiyam

கள்ளக்குறிச்சி தொகுதியில் 19 பேர் டெப்பாசிட் இழப்பு

கள்ளக்குறிச்சி தொகுதியில் 19 பேர் டெப்பாசிட் இழப்பு

கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் தி. மு. க. , அ. தி. மு. க. , வேட்பாளர்களை விட மற்ற அனைத்து வேட்பாளர்களும் டெப்பாசிட் இழந்தனர். தேர்தல் ஆணையம் விதிமுறைகள் படி, லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது பெயர், குடும்பம், முகவரி, சொத்து மதிப்பு, குற்ற வழக்குகள் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய படிவத்துடன் முன்வைப்பு தொகையினை வழங்க வேண்டும். அதில், பொது வேட்பாளராக இருந்தால், ரூ. 25 ஆயிரம் தொகையும், எஸ். சி. , - எஸ். டி. , சமூகத்தை சார்ந்தவராக இருந்தால் ரூ. 12, 500 தொகை டிபாசிட்டாக செலுத்த வேண்டும். தேர்தலில் மொத்தமாக பதிவாகிய ஓட்டுக்களில், 6ல் ஒரு பங்கு எண்ணிக்கை பெற்றிருந்தால் டிபாசிட் தொகை திரும்ப தரப்படும். அதன்படி, கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் 12 லட்சத்து 51 ஆயிரத்து 18 ஓட்டுக்கள் பதிவாகி இருந்தன. இதில், வெற்றி பெற்ற வேட்பாளர் தவிர மீதமுள்ள நபர்கள் 2 லட்சத்து 8 ஆயிரத்து 503 ஓட்டுக்களை பெற்றிருந்தால் அவர்களின் டிபாசிட் தொகை திரும்ப தரப்படும். அதன்படி, அ. தி. மு. க. , வேட்பாளர் குமரகுருவை தவிர பா. ம. க. , - நா. த. க. , கட்சிகள் வேட்பாளர்கள் உட்பட 19 வேட்பாளர்களும் டெப்பாசிட் இழந்தனர்.

வீடியோஸ்


கள்ளக்குறிச்சி
குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
Jun 08, 2024, 04:06 IST/கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி

குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

Jun 08, 2024, 04:06 IST
கள்ளக்குறிச்சி தாலுகா, கூத்தக்குடி காலனி மெயின்ரோடு பகுதியில் 15 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு சில தினங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கூத்தக்குடி - வேப்பூர் சாலையில் நேற்று காலை 6: 15 மணியளவில் காலி குடங்களுடன், பழைய காலனியில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் இருந்து குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வரஞ்சரம் போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் பேரில், 6: 50 மணியளவில் கலைந்து சென்றனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.