திருக்கோவிலூர் அடுத்த பூமாரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாணவர் சேர்க்கையை சார் ஆட்சியர் ஆனந்த் குமார்சிங் பூச்செண்டு மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கி இன்று துவக்கி வைத்தார். உடன் வட்டார கல்வி அலுவலர்கள் கஜேந்திரன், முரளி கிருஷ்ணன், தலைமை ஆசிரியர். சுகந்தி , ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.