உளுந்தூர்பேட்டை: குளவி கொட்டியதால் மூன்று பேர் காயம்

64பார்த்தது
உளுந்துார்பேட்டை தாலுகா பிள்ளையார் குப்பத்தை சேர்ந்தவர்கள் லட்சுமி நாராயணன் மனைவி பொன்னி 36; கிருஷ்ணமூர்த்தி மனைவி சித்ரா, 30; சக்திவேல் மனைவி பத்மா, 20; இந்த மூன்று பேரும் நேற்று காலை 10: 00 மணியளவில் வயல்வெளிக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது செல்லும் வழியில் குளவிகள், மூன்று பேரையும் துரத்தி துரத்தி கடித்தது.


இதில் காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி