கள்ளக்குறிச்சி: ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

74பார்த்தது
கள்ளக்குறிச்சி: ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
கள்ளக்குறிச்சியில், மாவட்ட சமூக நல அலுவலக பணியாளர்களின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில், பணியாளர்களின் பணி குறித்த தர வரிசை, அரசு திட்டங்கள் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், அனைத்துத் திட்டங்களும் பொதுமக்களை எளிதில் சென்றடையும் வகையில் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதில், மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.