ஈரோட்டில் இருந்து தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கம்
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை எடுத்து தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு செல்பவர்கள் சுலபமாக செல்லும் வகையில் தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதாவது வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் தீபாவளி பண்டிகை முன்னிட்டு கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஈரோடு மண்டலத்தை பொருத்தவரை 11 பணிமனைகளில் இருந்து தினம்தோறும் 800-க்கும் மேற்பட்ட உள்ளூர், வெளிமாவட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விசேஷ நாட்களில் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருட தீபாவளிக்காக ஈரோடு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் நேற்று முதல் இயங்கத் தொடங்கியுள்ளது. அதாவது சேலம் கோயம்புத்தூர் திருப்பூர் போன்ற பகுதிகளுக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்படுகிறது. இதைப்போல் தொலைதூரப் பயணமான சென்னை, திருநெல்வேலி நாகர்கோவிலுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஏற்கனவே பஸ்களில் முன்பதிவுகள் அனைத்தும் நிரம்பி விட்டதால் சிறப்பு பசுகளில் இடம் பிடிக்க மக்கள் போட்டி போடுகின்றனர்.