அந்தியூர் - Anthiyur

சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி முடிவு

சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி முடிவு

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பிரதான சாலை மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து அதிகமுள்ள சாலைகளில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், ஆணையாளர் மனிஷ் தலைமையில் நேற்று(செப்.18) ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்தில், வருகிற நாளை முதல் (வெள்ளிக்கிழமை) மீனாட்சி சுந்தரனார் சாலை (ஜி.ஹெச் ரவுண்டானா முதல் பி.எஸ். பார்க் வரை), பி.எஸ். பார்க் முதல் மணிக்கூண்டு, எல்லை மாரியம்மன் கோவில் வரை, ஸ்வாஸ்திக் கார்னர் முதல் வீரப்பன்சத்திரம் வரை, ஈ.வி.என் ரோடு (ஜி.ஹெச் ரவுண்டானா முதல் ரயில்வே ஸ்டேஷன், காளைமாடு சிலை வரை) ஆர். கே. வி ரோடு, சத்தி ரோடு ஆகிய பிரதான சாலைகளில் தற்போதுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற முடிவு செய்யப்பட்டது. பிரதான சாலைகளின் இருபுறமும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவது தடை செய்யப்பட்டு, அதற்கென மாநகராட்சி இடத்தில் உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்த ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது. அப்பகுதியில் உள்ள கடைக்காரர்களிடம் ஒரு கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தி, மீனாட்சி சுந்தரனார் சாலை உள்ளிட்ட முக்கிய தெருக்கள் முழுவதும் வாகனங்கள் நிறுத்தத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பதற்காக, மாவட்ட கலெக்டர் ஒப்புதல் பெற்று செயல்முறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வீடியோஸ்


రాజన్న సిరిసిల్ల జిల్లా