சன்னி லியோன்கிட்ட பேசறதுக்காவது இந்தி கத்துக்கணும் என்று இயக்குநர் பேரரசு கூறியுள்ளார். பேட்ட ராப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பேரரசு, "2,3 வருஷத்துக்கு முன்னாடி நிறைய பேர் "இந்தி தெரியாது போடா" அப்படினு டி-சர்ட் போட்டாங்க அதை பார்க்கும்போதும் சந்தோஷமா இருந்தது. இப்போதான் இந்தி தெரியாதது கவலையா போச்சு, பக்கத்துல சன்னி லியோன் உக்காந்துருக்காங்க, 2 வார்த்தை இந்தி-ல பேச முடியல. இதுக்காகவே இந்தி கத்துக்கணும்" என்று கிண்டலாக கூறினார்.