இந்தியாவில் கார் வாங்குபவர்களில் சுமார் 67% பேர் முதல் முறையாக கார் வாங்குபவர்கள் என்ற சுவாரஸ்ய தகவல் சில்லறை விற்பனை தளமான ஸ்பின்னி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. மேலும், இந்தியாவில் கார் வாங்குபவர்களின் 83% பேர் பெட்ரோல் கார்களையே வாங்க விரும்புகின்றனர். 12% பேர் டீசல் கார்களையும் 5% பேர் சிஎன்ஜி கார்களையும் வாங்க விரும்புகின்றனர் என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.