இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில், முகத்தோற்றத்தை அழகுபடுத்திக் காட்டும் Filter வசதிகள், 2025 ஜனவரி முதல் நீக்கப்படும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இயற்கைக்கு மாறான தோற்றத்தைப் பார்க்கும்போது, இளம் பெண்களுக்கு உடல் அமைப்பு குறித்த மன அழுத்தம் ஏற்படுவதாகக் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இளைஞர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இளம்பெண்களுக்கு.