அந்தியூர் - Anthiyur

முதியோர் காவல் நிலையத்திலிருந்து அம்மனுக்கு சீர்வரிசை

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான மிகவும் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் திருகோயில் உள்ளது. இக் கோவிலின் குண்டம் மற்றும் தேர் திருவிழா ஆண்டு தோறும் பங்குனி மாதம் நடைபெறுவது வழக்கம், அதன்படி கடந்த மாதம் 20-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது, கடந்த புதன்கிழமை அன்று விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா நடைபெற்றது, இந்த நிலையில் திருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான தேரோட்டம் மாலை தொடங்கியது, இதற்காக பத்ரகாளியம்மன் உற்சவர் சிலை கோவிலில் இருந்து தேர் நிலைக்கு காலை கொண்டுவரப்பட்டு தேரில் அமர வைக்கப்பட்டார், தொடர்ந்து மாலை சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது, முன்னதாக அந்தியூர் காவல் நிலையத்தில் இருந்து போலீசார், மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அம்மனுக்கு புடவை, பழ வகைகள் , பூக்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருள்களை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்று பத்ரகாளி அம்மனுக்கு படைத்தனர். தொடர்ந்து அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம், வட்டாட்சியர், காவல்துறையினர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனர், இந்த தேர் திருவிழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வீடியோஸ்


రాజన్న సిరిసిల్ల జిల్లా