சுற்றுலா பயணிகள் கோபி கொடிவேரி அணையில் குளித்தனர்

59பார்த்தது
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணையில் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க அருவிபோல கொட்டும் நீரில் சுற்றுலா பயனிகள் தங்கள் குடும்த்துடன் உற்சாக குளியலிட்டு மகிழந்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாகவே வெய்யிலின் தாக்கம் சுட்டெறித்து வருகிறது, வெய்யிலை சமாளிக்க பொதுமக்கள் நீர்நிலைகளை தேடி படையெடுத்து வருகின்றனர்

கொடிவேரி அணையில் நீர் அருவி போல கொட்டுவதால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்

வெய்யிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் கொடிவேரி தடுப்பணையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர்.

ஈரோடு, நாமக்கல், சேலம், கோவை, மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பலர் குடும்பம், குடும்பாக வந்து அருவியில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். இதே போல் வெளி மாநிலங்கள் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து இருந்தனர்.

வெய்யிலில் இருந்து தப்பிக்கும் வகையில் ஆனந்தமாக அருவியில் குளித்து மகிழ்ந்தனர். , மேலும் பரிசல் பயணம் மேற்கொண்டு பூங்காவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடி மகிழ்ந்தனர் , மற்றும் தங்கள் கொண்டு வந்த உணவுகளை உண்டும், கடைகளில் விற்கப்படும் பொறித்த மீன்களின் வாங்கி உண்டும் சுற்றுலா பயணிகள் தங்கள் பொழுதை குடும்பத்துடன் கழித்து வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி