அரசு பஸ் ஓட்டுநர் -கடை உரிமையாளர் திடீர் மோதல்

50பார்த்தது
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நாய்க்கன்காட்டைச் சேர்ந்தவர் கனகராஜ் (56). இவர் அதே பகுதியில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு பிளாஸ்டிக் நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் கனகராஜ் கடையில் இருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து மதுரை செல்வதற்கான பஸ் சாலையை கடந்து கனகராஜ் கடை முன்பு நின்றுள்ளது.
அப்போது வீட்டிற்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்ற கனகராஜ் மதுரை பஸ்சின் முன்புறம் சாலையை கடக்க முயன்றபோது மற்றொரு பஸ் வரவே இருசக்கர வாகனத்தை மதுரை செல்ல உள்ள பஸ்சின் முன்புறம் நிறுத்தி உள்ளார். இதில் பஸ் ஓட்டுநர் கள்ளிப்பட்டியை சேர்ந்த ஈஸ்வரனுக்கும், கனகராஜுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். பஸ் ஓட்டுநர் காக்கப்படுவதை அறிந்து போக்குவரத்து கழக பணிமனையில் இருந்த மேலும் சில பணியாளர்கள் அரசு பஸ் ஓட்டுநர் ஈஸ்வரனுக்கு ஆதரவாக திரண்டனர்.
அவர்கள் கனகராஜைதாக்க ஆரம்பித்தனர். இதைப் பார்த்து கனகராஜிக்கு ஆதரவாக வந்தவர்களும் தாக்குதலில் ஈடுபட்டனர். இருதரப்பினரும் தாக்கிக் கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதில் காயமடைந்த அரசுபஸ் ஓட்டுநர் ஈஸ்வரன் மற்றும் கனகராஜ் ஆகியோர் கோபி செட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி