சத்தியமங்கலம் அருகே உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் திருக்கோவிலில் கூடுதல் தலைமை செயலர் அமுதா ஐஏஎஸ் குண்டம் இறங்கி தனது நேர்த்திக்கடன் செலுத்தினார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் இக்கோவிலில் வருடா வருடம் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம் இந்த குண்டம் திருவிழாவில் வருடா வருடம் தற்போது உள்ள கூடுதல் தலைமைச் செயலர் அமுதா ஐஏஎஸ் குண்டம் இறங்கி தனது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம் அதேபோல் இந்த ஆண்டும் பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வந்த கூடுதல் தலைமைச் செயலர் அமுதா ஐஏஎஸ் குண்டம் இறங்கி தனது நேர்த்திக்கடன் செலுத்தி பண்ணாரி அம்மனை வழிபட்டு சென்றார்