கோபி பச்சமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா
ஈரோடு மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றனது கோபிசெட்டிபாளையத்தில் உள்ள பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலாகும், இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தும், பன்னீர் குடம், பன்னீர் காவடி ஏந்தி வந்து முருகனை வழிபடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம், அருள்மிகு சண்முகருக்கு சிகப்பு சாத்தி, காவடி பால் குடாபிஷேகங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் சுவாமி மயில் வாகனத்தில் தேர்வீதி வலம் வருதல், சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திர தேர்திருவிழா மாலை வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது, இந்த விழாவில் மேளதாளங்கள் முழங்க கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்,