முருகன் கோவிலில் 3 மணி நேரம் வரை காத்திருந்துசாமி தரிசனம்

77பார்த்தது
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருகின்றனர். இந்நிலையில் தீபாவளி மற்றும் தொடர் விடுமுறை காரணமாகவும் , வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை அடிவாரத்தில் குவிந்துள்ளனர். படிப்பாதை யானை பாதை வழியாக நடந்து செல்லும் பக்தர்கள் மலைக்கோவிலில் இரண்டு மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர் மேலும் ரோப் கார் பராமரிப்பு பணிக்காக 45 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளதால் மின் இழுவை ரயிலில் குழந்தைகளுடன் இந்த பக்தர்களும் முதியோர் என சுமார் 3 மணி நேரம் வரை காத்திருந்து மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனத்திற்கு இரண்டு மணி நேரம் வரை காத்திருந்தும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது மேலும் பக்தர்கள் பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நாளை கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி