ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த அக்.31ம் தேதி வெளியான படம் ‘அமரன்’. இந்த படத்தில், தேர்தலின் போது நடத்தப்படும் தாக்குதல் காட்சிகளில் எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல் CRPF வீரர்கள் படுகொலை செய்யப்படுவது வேதனையும், அதிர்ச்சியும், அளிப்பதாக படக்குழுவுக்கு தமிழ்நாடு முன்னாள் CAPF நலன் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், சர்ச்சைக்குரிய அந்த காட்சிகளை உடனடியாக நீக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.