திண்டுக்கல் மாவட்டம் பழனியில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை நேரத்தில் திடீரென இடி மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. மழையின் காரணமாக ரயில்வே சாலை பேருந்து நிலையத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மாலை நேரத்தில் மழை பெய்ததால் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் மழையில் நனைந்தபடி வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர்.