தேசிய சீனியர் ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நேற்று (நவ.4) தொடங்கியது. இதில் ‘சி’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு - ஆந்திரா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கேப்டன் கார்த்தி இரு கோல்கள் அடித்தார். செல்வராஜ் கனகராஜ், திலீபன், ஜோஷுவா பெனடிக்ட் வெஸ்லி, மனோஜ் குமார், மாரீஸ்வரன் சக்திவேல் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.