குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆண்கள் பெண்கள் என ஆயிரத்து 200 பேர் படித்து வருகின்றனர். இங்கு மாணவிகளுக்கான கழிப்பறை, சுற்று சுவரை ஒட்டிய ஓரப்பகுதியில் உள்ளது. இங்கு இடைவேளை நேரத்தில், கழிப்பறைக்கு சென்ற மாணவிகள் அங்கு ஒரு நபர் நிற்பதாக, ஆசிரியர்களுக்கு தகவலை கூறினர். அங்கு சென்ற ஆசிரியர்கள் அந்த நபரைப் பிடித்து விசாரித்த போது, முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். இதனை எடுத்து பள்ளி ஆசிரியர்கள்
குஜிலியம்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, அங்கு சென்ற போலீசார் அந்த நபரை பிடித்து, ஸ்டேஷன் அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும், அவர் வைத்துள்ள மொபைல் போனையும், மறைந்திருந்து படங்கள் எதுவும் எடுத்தாரா என்ற கோணத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.