IPL 2025 இன்றைய லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. கவுகாத்தியில் நடைபெறும் இந்த போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. ராஜஸ்தான் அணி முதல் பேட்டிங் செய்யவுள்ளது. இரண்டு அணிகளும் முன்னதாக தலா ஒரு போட்டிகள் விளையாடி தோற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளனர். எனவே இரண்டு அணிகளும் வெற்றி பெற கடுமையாக விளையாட வாய்ப்புள்ளது.