உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம், கீரனுார் பேரூராட்சியில் ரூ. 5. 25 கோடி மதிப்பீட்டில் வரத்து வாய்க்கால்கள் புனரமைப்பு பணிக்கு அடிக்கல் நாட்டி, மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ. 28. 00 இலட்சம் மதிப்பீட்டிலான கடனுதவிகள், பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கினார்.
விழாவில், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் குருமூர்த்தி, திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் சுபாஷினி, நங்காஞ்சியாறு செயற்பொறியாளர் பாலமுருகன், பழனி வட்டாட்சியர் பிரசன்னா, தொப்பம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் தாகிரா மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.