திண்டுக்கல் கரூர் நெடுஞ்சாலை வேடசந்தூர் அடுத்த கல்வார்பட்டி ரங்கமலை கணவாய் வழியாக, கரூர் நோக்கி செல்கிறது.
இருவழி சாலை நான்கு வழி சாலையாக மாற்றப்பட்ட பின் இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனத்தில் வெளிச்சம் எதிர் திசையில் செல்லும் வாகனங்களுக்கு தொந்தரவு இல்லாமல் இருப்பதற்காக சென்டர் மீடியனில் அரளிச்செடி வளர்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த நெடுஞ்சாலையில்,
ரெங்கமலை கணவாய் அருகில் இருந்து, திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு, சென்டர் மீடியனில் பற்றிய காட்டு தீ மள மள வென கடும் புகை மூட்டத்துடன் பற்றி எரிந்ததில், சென்டர் மீடியனில் வைக்கப்பட்டிருந்த அரளிச் செடிகள் அனைத்தும் எரிந்து கருகி நாசமாகிவிட்டன.
காட்டு தீ பற்றி எரிவதைக் கண்ட மதுக்கான் நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தினர், கனரக வாகனங்களில் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைத்தனர். அதற்குள் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு தீ பற்றி எரிந்து முற்றிலும் நாசமானது.