குஜிலியம்பாறை: அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

80பார்த்தது
கரூரில் இருந்து குஜிலியம்பாறை நோக்கி வந்த அரசு பஸ், பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு, அப்படியே மணப்பாறை ரோட்டில் கரூர் மாவட்டம் இடையபட்டி நோக்கி சென்றது. இந்த பஸ்ஸில் கரூர் சீதப்பட்டி ரத்தினம் 46, டிரைவராகவும், கரூர் ஓமாந்தூர் சஞ்சீவி 55, நடத்துனராகவும் பணியில் இருந்தனர்.


குஜிலியம்பாறையில் இருந்து ஒரு கி. மீ. ,
தூரம் உள்ள பண்ணைக்காரன்பட்டி பஸ் ஸ்டாப்பில் பயணிகளை இறக்கி விட்டு பஸ் புறப்பட்டபோது, பஸ்ஸின் பின்புற கண்ணாடி டமார் என்ற சத்தத்துடன் உடைந்தது.

அந்த பஸ் ஸ்டாப்பில் இறங்கியவர்கள் தான் கண்ணாடியை உடைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பஸ் டிரைவர் பஸ்சை குஜிலியம்பாறை போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வந்தார்.

புகாரின் பேரில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர்கள் யார் என்பது குறித்து,
குஜிலியம்பாறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி