அருண் குமார் இயக்கத்தில் எச்ஆர் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் விக்ரமின் 62 ஆவது படமாக உருவாகியுள்ள படம் வீர தீர சூரன். எஸ்.ஜே.சூர்யா , சூரஜ் வெஞ்சமூடு , துஷாரா விஜயன் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், டெல்லி உயர் நீதிமன்றம் படம் வெளியாவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் சேட்டலைட் உரிமம் தொடர்பாக எழுந்த பிரச்சனையால் B4U மீடியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.