ஒட்டன்சத்திரம்: கார் சர்வீஸ் சென்டரில் பயங்கர தீ விபத்து

76பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம்- தாராபுரம் சாலையில் உள்ள செம்மடைப்பட்டியை சேர்ந்தவர் சிவரத்தினம். இவர் கார் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். இந்நிலையில் பழுது நீக்குவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 25-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து தீக்கிரையாகின. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி