ஃபுட்பால் லெஜண்ட் மெஸ்ஸி வரும் அக்டோபரில் இந்தியா வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொச்சியில் நடைபெறும் 2 ஃப்ரண்ட்லி போட்டிகளில் அர்ஜெண்டினா அணியினருடன் மெஸ்ஸி விளையாட இருக்கிறார். இந்தியாவில் ஃபுட்பாலை பிரபலப்படுத்தும் நோக்கில், இந்த போட்டிகள் நடைபெறும் என அர்ஜெண்டினாவின் ஸ்பான்சரான HSBC தெரிவித்துள்ளது. மெஸ்ஸி கடைசியாக கடந்த 2011ல் இந்தியாவில் நடந்த உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் விளையாடினார்.