உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், காளாஞ்சிப்பட்டி கலைஞர் நுாற்றாண்டு போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில், 1926 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ. 127. 11 கோடி மதிப்பீட்டிலான கடனுதவிகளை வழங்கினார்.
இன்றைய விழாவில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர், திண்டுக்கல் மாவட்டத்தில் 1, 851 சுய உதவிக்குழுவிற்கு ரூ. 125. 99 கோடி வங்கிக் கடனுதவி, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் 36 ஊராட்சிகளை சார்ந்த 75 சுய உதவிக்குழுக்களிலுள்ள 141 உறுப்பினர்களுக்கு ரூ. 88, 25, 000 நுண் நிறுவனக் கடனுக்கான ஆணைகள் மற்றும் 7 பயனாளிகளுக்கு ரூ. 23, 97, 878 மதிப்பீட்டில் 30 சதவீதம் இணை மானியத்துடன் கூடிய கடனுக்கான ஆணைகள் என ஆக மொத்தம் 1, 926 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ. 127. 11 கோடி மதிப்பீட்டிலான கடனுதவிகள், 7 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம் ஆகியவற்றை வழங்கினார். முன்னதாக மகளிர் சுயஉதவிக்குழுவினர் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியை பார்வையிட்டார்.
விழாவில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் சதீஷ்பாபு, கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் குருமூர்த்தி, திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் சுபாஷினி, மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.