ரெட்டியார்சத்திரம்: ஆம்னி மோதி டீ மாஸ்டர் படுகாயம்

70பார்த்தது
திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா வையம்பட்டியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் வயது 55 டீ மாஸ்டர். இவர் வேடசந்தூர் ஆத்து மேட்டில் இருந்து அய்யனார் கோவில் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இவரது பின்னால் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் நாலு புளிக்கோட்டையை சேர்ந்த மகேஷ் குமார் வயது 26 என்பவர் ஓட்டி வந்த ஆம்னி வேன் மோதியதில் படுகாயம் அடைந்தார். இவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து சப் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி