நிலக்கோட்டை - Nilakottai

நிலக்கோட்டை: நீரோடை தடுப்புகள் அகற்றம்

நிலக்கோட்டை: நீரோடை தடுப்புகள் அகற்றம்

கொடைரோடு அருகே வறண்ட கண்மாய்க்கு தண்ணீர் நிரப்புவதற்காக நீரோடையை மறித்து விவசாயிகள் ஏற்படுத்திய தடுப்புகள் தாசில்தார் தலைமையில் அகற்றப்பட்டது. கொடைரோடு அன்னசமுத்திரம் கண்மாய்க்கு தண்ணீர் வரத்து நின்றதால் வறண்டது. சுற்றுப்புற பகுதி நிலத்தடி நீர்மட்டமும் குறைந்தது.  குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட மக்கள், விவசாயிகள் கருக்காச்சி ஓடையில் தடுப்பு ஏற்படுத்தி அதன் தண்ணீரை அன்னசமுத்திரம் கண்மாய்க்கு திருப்பினர். இதனிடையே நீதிமன்ற உத்தரவின்படி கருக்காச்சி ஓடை தடுப்பை அகற்ற நிலக்கோட்டை தாசில்தார் விஜயலட்சுமி தலைமையில் பொதுப்பணித்துறையினர், அம்மைநாயக்கனூர் போலீசாரோடு வந்தனர்.  கொடைரோடு பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது விவசாயிகள் சிலர் விஷ பாட்டில்களுடன் தண்ணீர் வரவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்வோம் எனக்கூறி போலீசார் விஷ பாட்டில்களை பறித்தனர். அம்மைநாயக்கனூர் பேரூராட்சி தலைவர் செல்வராஜ், கவுன்சிலர் விஜயகுமார் நிலக்கோட்டை தாசில்தாருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு பொதுப்பணித்துறையினர் கருக்காச்சி ஓடை தடுப்பை அகற்றினர்.

வீடியோஸ்


భద్రాద్రి కొత్తగూడెం జిల్లా