திண்டுக்கல்: வரத்து குறைவால் பூக்களின் விலை உயர்வு

80பார்த்தது
திண்டுக்கல் அண்ணா பூமார்க்கெட்டில் பூக்கள் விற்பனைக்காக திண்டுக்கல் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து ஈரோடு திருச்சி சேலம் சென்னை கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு பூக்கள் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்படுகிறது. திண்டுக்கல்லில் கடந்த சில தினங்களாக மழை அவ்வப்போது பெய்து வருகிறது. மேலும் பனிப்பொழிவும் ஆரம்பமாகியுள்ளது. இதன் காரணமாக பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால் நேற்று திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை பூ 1850 முதல் 2000 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதேபோல் சம்பங்கி கிலோ ரூ100க்கும், ரோஜாப்பூ ரூ100க்கும் முல்லைப் பூ ரூ800க்கும், ஜாதிபூ ரூ400க்கும், கனகாம்பரம் ரூ600க்கும், கோழிகொண்டை ரூ70க்கும். , செண்டுமல்லி ரூ60க்கும், காக்கரட்டான் ரூ600க்கும், செவ்வந்தி ரூ100 முதல் 120 வரையிலும், வாடாமல்லி ரூ20 முதல் 40 வரையிலும் மரிக்கொழுந்து ரூ100க்கும், மருகு ரூ120க்கும், அரளி ரூ150க்கும், விருச்சிப் ரூ70க்கும், தாமரைப்பூ ரூ10க்கும் விற்பனையாகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி