திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நீதிமன்றத்திற்கு, வத்தலகுண்டு அருகே கீழகோவில்பட்டியை சேர்ந்தவர் நடராஜன்(69) என்பவர் வழக்கு விசாரணைக்காக வந்திருந்தார். இவர் வராண்டாவில் நின்றிருந்தபோது கூரை இடிந்து விழுந்தது. இதில் நடராஜன் படுகாயமடைந்து சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து நிலக்கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.