நிலக்கோட்டை தாலுகா கொம்பைப்பட்டி பஞ்சாயத்து உள்ள சின்ன வட்டி கிராமத்தில் மழை அதிகமாக பெய்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இரண்டு நாட்களாக தேங்கிய மழை நீரை அகற்ற நிர்வாகம் எதுவும் கண்டு கொள்ளவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பே சின்ன பட்டியில் மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஒரு ஒருபுறம் பணிகள் நடைபெற்று முடிந்தன. மழை நீர் தேங்கும் பகுதியில் எந்தவித வேலைகளும் நடைபெறவில்லை. இதனால் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.