திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அக்ராஹாரத்தில், பசுவன் ஜோத்திரை வழிபாடு, கடந்த பத்து தினங்களாக நடைபெற்றது. உலக நன்மை வேண்டி பாரம்பரிய கோலாட்ட பசுவன் ஜோத்திரை வழிபாடு நடைபெற்றது. முன்னதாக தீபாவளி அன்று அம்மாவாசையையொட்டி பசுமடத்தில் துவங்கிய பசுவுன் ஜோத்திரை வழிபாடானது, விவசாயம் பெருகவும், மழைவளம் சிறக்கவும், கால்நடைகள் பெருகவும், இந்த வழிபாடு முக்கியமானது ஆகும். உலக மக்கள் நோய் நொடி இல்லாமல் வாழவும், ஜோத்திரை வழிபாடு நடைபெற்றது. களிமண்ணால் பசுவன் உருவாகம் செய்து, முளைப்பாரியுடன் இந்த ஜோத்திரை வழிபாடு செய்வார்கள். தேவதை வழிபாடு என கூறப்படும் இந்த வழிபாடு, நானூறு ஆண்டுகளாக தொடர்ந்து வழிபாடு செய்து வருகின்றனர். இந்த வழிபாட்டில் பெண்கள் கோலாட்டம், கும்மி பாடல்கள் பாடி, கோலாட்டம் ஆடி கொண்டாடுவார்கள். பின்பு கந்த சஷ்டி முடிந்த பின் பத்தாம்நாளில், பசுவன் ஜோத்திரை ஊர்வலம் சங்கரன் தலைமையில் நடைபெற்றது. வத்தலக்குண்டு அக்ராஹாரம் அமைந்துள்ள நடுத்தெரு, கோவில்தெரு பகுதிகளில் கோலாட்டத்துடன் பசுவன் ஜோத்திரை ஊர்வலம் வந்து நிறைவடைந்தது. பின்னர் பசுவன் நந்தி தேவர் பரிவார தெய்வங்களையும், முளைப்பாரியை மஞ்சளாற்றில் கொண்டு கரைத்தனர். பசுவன் ஜோத்திரை யாத்திரை நிறைவு பெற்றதும் கலந்து கொண்ட பக்தர்கள் மற்றும், பொதுமக்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.