திண்டுக்கல்: மர்ம காய்ச்சல்; சுகாதாரமற்ற குடிநீரால் பிரச்சனை

63பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது கொடைக்கானல் உட்பட்ட மேல்மலை கிராமங்களில் ஒன்றான கூக்கால் கிராமம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதங்களாகவே குழந்தைகள், பெரியவர்கள் சிறியவர்கள் அனைவருக்கும் மர்ம காய்ச்சலானது பரவி வந்தது.

மருத்துவரை அணுகி ஆலோசனைகளை கேட்டுறிந்தனர். அப்பொழுது மருத்துவர் சுகாதாரமற்ற குடிநீர் பருகுவதால் தான் காய்ச்சல் பரவுகிறது என்று கூறியுள்ளார். அதன் அடிப்படையில் பொதுமக்கள் ஒன்று கூடி அப்பகுதியில் ஒன்றிய பஞ்சாயத்தால் கட்டிக் கொடுக்கப்பட்ட குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய முடிவு செய்தனர்.

அப்பொழுது சுமார் மூன்று அடிக்கு மேல் களிமண் சகதியும் குப்பையுமாக காட்சியளித்தது அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் தானாகவே முன்வந்து குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யத் தொடங்கினர். சுத்தம் செய்த மக்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது குடிநீர் தொட்டியில் பாம்பு பள்ளி குருவி போன்ற நச்சுத்தன்மையுடைய உயிரினங்கள் இறந்து கிடந்துள்ளது மேலும் பிளாஸ்டிக் குப்பைகள் தொட்டியில் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து கிராம தொட்டியை சுத்தம் செய்து குடிநீர் விநியோகம் செய்தனர்.

ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் இருந்தபோதிலும் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவதில்லை கவலை தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி