நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பட்டாதாரர்களின் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் அரசாணையால் குத்தகைதாரர் நெல் வாங்க மறுக்கப்படும் நிலையில் இதன் ஆணையை ரத்து செய்ய விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். நிலக்கோட்டை பகுதியில் விளாம்பட்டி, மட்டப்பாறை, ராமராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் 3000 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நெல் அறுவடை தொடங்கி உள்ளது.
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு வாணிபக் கழகம் சார்பில் விளாம்பட்டியில் நெல் கொள்முதல் தொடங்கப்பட்டது. இதனிடையே சொந்த நில பட்டாதாரர்கள் மட்டுமே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பயனடைய முடியும் என்ற அரசாணையால் குத்தகை, உழவடை செய்யும் விவசாயிகள் வழங்கும் நெல் வாங்க மறுக்கப்படுகிறது. இதனால் இவர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.