திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பெரியகுளம் சாலையில் மஞ்சளாறு கரையோரம் உள்ள ஒரு மோட்டார் பைக் மெக்கானிக் கடைக்குள் உடும்பு ஒன்று புகுந்து பதுங்கி இருந்தது.
இதனை அடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடைக்குள் பதுங்கி இருந்த இரண்டு வயது உடும்பை உயிருடன் பத்திரமாக மீட்டனர்
மஞ்சள் ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் செல்வதால் ஆற்றில் அடித்து வரப்பட்ட உடும்பு கரையோரத்தில் இருந்த கடைக்குள் புகுந்து இருக்கலாம் என கூறப்படுகிறது
மீட்கப்பட்ட உடம்பு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு அடர்ந்த வனப் பகுதிக்குள் விடப்பட்டது.