கொடைக்கானல்: சாலையில் நிரம்பி ஓடும் கழிவு நீர்

78பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு உட்பட்ட வில்பட்டி கிராஸ் என்ற பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் பள்ளங்கி மாட்டுப்பட்டி அட்டுவம்பட்டி போன்ற கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலை ஆகும்.

கழிவுநீர் வாய்க்கால் இல்லாததால் கழிவுநீர் சாலையில் நிரம்பி ஓடுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

மேலும் பள்ளிக் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவியர்கள் மிகச் சிரமத்துடன் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது.

இப்பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் தொடக்கப்பள்ளி அமைந்துள்ளதால் மாணவ மாணவியர்களுக்கு நோய்த்தொற்றி ஏற்படும் அபாயம் உள்ளது.


சாலையில் நிரம்பி ஓடும் கழிவுநீர் வாய்க்காலை சீர் செய்து தர வேண்டும் இதனால் தொற்று நோய் பரவும் அபயம் உள்ளதாக அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி