சாணார்பட்டி: கழிவுநீர் ஓடையை கற்களை வைத்து அடைத்த தனிநபர்
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம் ராஜகாப்பட்டி ஊராட்சியில் ராஜக்காபட்டி பெருமாள் கோவில் பின்புறம் ஊராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் ஓடையில் தனி நபர் கற்களை வைத்து அடைத்துள்ளதால் கழிவு நீர் செல்ல வழி இன்றி தேங்கி நிற்கும் நிலையில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.