திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. இந்நிலையில் நத்தம் அருகே புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பரளி, அம்பேத்கர் நகர், நாயக்கர் தெரு மற்றும் இந்திரா காலனி ஆகிய பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது இதனால் அப்பகுதியில் சாலை ஓரங்களில் இருந்த 5 க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து மின் கம்பங்களில் விழுந்தது. இதனால் அப்பகுதியில் நேற்று மாலை முதலே மின் தடை ஏற்பட்டுள்ளது. மேலும் சாலையின் குறுக்கே மின் கம்பங்களில் மரங்கள் விழுந்ததால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் அப்பகுதியை கடந்து செல்லும்போது ஒருவித அச்சத்துடன் கடந்து சென்றனர். மேலும் அப்பகுதியில் சென்ற வாகனங்களும் மிகுந்த சிரமத்திற்கு இடையே கடந்து சென்றது.
எனவே சாய்ந்து விழுந்த மரங்களை ஊராட்சி நிர்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.