திண்டுக்கல்: மரக்கன்றுகள் நடவு துவக்க விழா
சீட்ஸ் அறக்கட்டளை சார்பில் அய்யலுார் வாழ்வாதார திட்டத்தின் மூலம் வனப்பகுதியில் தேவாங்குகள் வாழிடப் பகுதியையொட்டிய கிராம பகுதியில் 20 ஆண்டுகளில் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் இலவசமாக பல்வேறு வகை மரங்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகிறது. இதற்கான மரக்கன்றுகள் நடவு துவக்க விழா வடமதுரை காணப்பாடியில் நடந்தது. சீட்ஸ் அறக்கட்டளை நிறுவனர் முத்துசாமி தலைமை வகித்தார். ஊராட்சி துணைத் தலைவர் நல்லமுத்துகுழந்தைவேல், திண்டுக்கல் மாநகராட்சி கவுன்சிலர் கணேசன் முன்னிலை வகித்தனர். திட்ட மேலாளர் சதீஸ்குமார் வரவேற்றார். ஓய்வு வன அலுவலர் காளைராஜன் துவக்கி வைத்தார். திருப்பூர் சூழலியாளர் கோவை சதாசிவம், திட்ட இயக்குனர் ரவிக்குமார், கள ஒருங்கிணைப்பாளர் முகவதுஉவைஸ் பங்கேற்றனர்.