நத்தம்: அனைத்து மக்களுக்கான ஆம்புலன்ஸ் வாகனம் அர்ப்பணிப்பு

73பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்கான ஆம்புலன்ஸ் வாகனம் அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவர் ஹைதர் அலி கலந்து கொண்டு பேருந்து நிலையம் மற்றும் தர்பார் நகரில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அனைத்து சமுதாய மக்களும் பயன்படுத்தும் வகையில் புதிதாக வாங்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தை நத்தம் பேரூராட்சி தலைவர் ஷேக் சிக்கந்தர் பாட்சாவிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட பொருளாளர் சில்லி சேட் நகரத் தலைவர் ஹபிபுல்லா நகர பொருளாளர் முகமது உசேன் உள்ளிட்ட மாநில மாவட்ட நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி