திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா அலுவலக வளாகத்தில் நத்தம் தீயணைப்பு துறையினரால் பேரிடர் கால தடுப்பு குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மழை உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலங்களில் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளை எவ்வாறு கையாள்வது, மழை வெள்ளத்தில் சிக்குபவர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்தும் நத்தம் தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். இதில் வீடுகளில் இருக்கும் பொருட்களை கொண்டு மழைக்காலங்களில் பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்வது குறித்தும் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.
இதில் நத்தம் தாசில்தார் விஜயலெட்சுமி, தீயணைப்பு நிலைய அலுவலர் விவேகானந்தன், பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.