திண்டுக்கல், நத்தம் ரோட்டில் நொச்சியோடைப்பட்டி அனுகிரகா கல்லூரியில் உள்ள இயற்பியல் துறை சார்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாக புது சிந்தனை மாற்றத்திற்கான உலகம் என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சிக்கு நத்தம் வட்டார கல்வி அலுவலர் எஸ்தர் ராஜம் தலைமை தாங்கினார்.
இயற்பியல்துறை தலைவர் சகாயராஜன் வரவேற்று பேசினார். கல்லூரியின் செயலாளர் தந்தை முனைவர் ஜான்பிரிட்டோ, முதல்வர் தந்தை முனைவர் பெர்ணாட்ஷா, பொருளாளர் தந்தை முனைவர் மேத்யூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொசவபட்டி புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி, நொச்சிஓடைப்பட்டி கார்மல் பள்ளி, பொன்னகரம் அருள்ஜோதி வள்ளலார் பள்ளி, திண்டுக்கல் அண்ணாமலையார் மேல்நிலைப்பள்ளி, அனுகிரகா பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலாளர் தந்தை முனைவர் ஜான்பிரிட்டோ, முதல்வர் தந்தை முனைவர் பெர்ணாட்ஷா, பொருளாளர் தந்தை முனைவர் மேத்யூ, தலைமையாசிரியர் பாலசுப்புரமணியன், பேராசிரியர் சுகிர்தா, பேராசிரியர் காஞ்சனா ஆகியோர் மாணவர்களுக்கு பாராட்டு கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இயற்பியல் துறை மாணவர்கள் சிறப்பாக செய்திருந்தனர். நிறைவாக பேராசிரியர்கள் சுகிர்தா, காஞ்சனா ஆகியோர் நன்றி உரை ஆற்றினார்.