திண்டுக்கல்: தரையில் உருண்டு நூதன முறையில் மனு

66பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் கொசவபட்டி பகுதியில் உள்ள கள்ளிக்குத்து ஓடையை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்து பல கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது இதனால் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தேங்கி நிற்கின்றது இதன் காரணமாக
அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது மேலும் வசித்து வருகின்ற பொது மக்களுக்கு தொற்றுநோய் போன்ற உடல் பாதிப்புகள் அதிக அளவில் ஏற்படுகிறது. இதனால் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றி கழிவுநீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என பலமுறை தாசில்தார் மற்றும் ஊராட்சி அதிகாரியிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அப்பொழுது பாபுராஜ் என்பவர்
தரையில் உருண்டு அங்கப்பிரவேசம் செய்து நூதன முறையில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் கொசவப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் உடன் சென்றனர்.


தங்களது கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் இல்லையென்றால் பொதுமக்களை ஒன்று திரட்டி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி