நத்தம்: பள்ளிவாசலில் சந்தனம் பூசுதல் மற்றும் கந்திரி

58பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள செல்லப்பநாயக்கன்பட்டி ஊராட்சி மேலமேட்டுப்பட்டியில் உள்ளது முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல். இங்கு உலக நன்மை வேண்டி ஆண்டுதோறும் சந்தனம் பூசுதல் மற்றும் கந்திரி விழா நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டிற்கான விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றப்பட்ட புளியமரத்தின் முன்பு சந்தனம், சர்க்கரை, ஆப்பிள், வாழைப்பழம், பேரிச்சம்பழம், திராட்சை மற்றும் இனிப்பு வகைகள் வைக்கப்பட்டு சிறப்பு தொழுகை நடத்தினர். முன்னதாக பள்ளிவாசல் முன்பாக விளக்கேற்றி கிடாய்கள் வெட்டப்பட்டது. அதன் பிறகு நடந்த தொழுகையில் திரளானோர் கலந்துகொண்டு சந்தனம் பூசி வேண்டிக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து கந்திரி அசைவ விருந்து நடந்தது. மேலும் இந்த கந்திரி கறி விருந்திற்கு சந்தா தொகை செலுத்திய குடும்பகளுக்கு பிளாஸ்டிக் வாளிகளில் அன்னதானங்கள் நிரப்பி வழங்கப்பட்டது. இதில் நத்தம், வத்திபட்டி, பாறைப்பட்டி மூங்கில்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :